வாமதேவர் என்னும் முனிவர் பல தலங்களுக்குச் செல்லும் வழியில் இங்குள்ள ஒரு அரச மரத்தின் கீழ் இளைப்பாறினார். அப்போது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டு அவரை வழிபட்டதால் மூலவர் 'அரசலீஸ்வரர்' என்று அழைக்கப்பட்டார். இத்தலமும் 'திருஅரசிலி' என்று வழங்கப்படுகிறது.
மூலவர் 'அரசலீஸ்வரர்', 'அரசிலிநாதர்' என்னும் திருநாமங்களுடன், அழகிய சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'பெரிய நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, நடராஜர், பைரவர், நால்வர் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.
வாமதேவ முனிவர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|